states

img

முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு

இம்பால், ஜூலை 20 - மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கை தான ஹெய்ரெம் ஹெரோ தாஸ் என்ற நபர் காவல் நிலையத்தில் உள்ள புகைப் படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஹெய்ரெம் ஹெரோதாஸ் புதனன்று கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் முதல்வர் கூறி யிருந்தார்.  இரண்டு பெண் களை நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவரை மட்டும் கைது செய்து பிரச்ச னையை முடிக்க மணிப்பூர் காவல்துறையினர் முயற்சி ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.